சிக்குன் குனியா, டெங்கு போன்றவற்றின் மரணப்பிடி மற்றும் பெரும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்குள் சிக்கியுள்ள யாழ்ப்பாண குடாநாட்டில் 'நுளம்புத்திரி' உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றது.
மூவரின் முயற்சியால் உருவாகியுள்ள இந்த உள்ளூர் நுளம்புத்திரி சாம்பிராணி வாசத்துடன் நின்று எரிவதாகவும் சிறந்த பலனைத் தருவதாகவும் யாழ்நகரில் வசிக்குமொரு பாவனையாளர் கூறினார்.
கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள யாழ்ப்பாண மக்கள் நுளம்புத் தொல்லையாலும் அல்லல்பட்டு வருகின்றனர். சிக்குன் குனியாஇ டெங்கு போன்ற நுளம்பால் பரவும் நோய்கள் உயிர் குடித்து வருகின்றபோதும் குடாநாட்டில் நுளம்புத்திரிகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. ஒரு பெட்டி நுளம்புத்திரியின் விலை சுமார் 100 ரூபா வரையில் விற்கப்படுகின்றது.
நுளம்பு பெருமளவில் படையெடுத்துள்ள குடாநாட்டில் அவற்றை விரட்டியடிக்கக் கூடிய நுளம்புத்திரி இல்லாத சூழ்நிலையிலேயே இந்த ஹஉள்ளூர் நுளம்புத்திரி' (யாழ்ப்பாண நுளம்புத்திரி) தயாரிக்கப்பட்டு புழக்கத்துக்கு வந்துள்ளது.
மெழுகுதிரி வடிவில் அமைந்துள்ள இந்த நுளம்புத்திரி பல மணித்தியாலங்கள் (கிட்டத்தட்ட 5 மணித்தியாலங்கள்) நின்று எரிவதாகவும் சாம்பிராணி+ வேப்பமிலை போன்றவற்றின் வாசனை எழுவதாகவும் நுளம்புகளை விரட்டியடிப்பதாகவும் தெரிவித்த பாவனையாளரொருவர் புகைதான் சற்று அதிகளவில் வருவதாகவும் தெரிவித்தார்.
ஒன்று 5 ரூபா என்ற அடிப்படையில் விற்பனையாகும் இந்த ஹயாழ்ப்பாண நுளம்புத்திரி'யை யாழ்ப்பாணம்- சிவலிங்கப் புளியடியைச் சேர்ந்த தவமணி தவராசாஇ அவரது சகோதரி டயானா மற்றும் அருமைத்திருநாயகம் தேவகி ஆகிய மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த முயற்சியில் முன்னணியில் நின்று செயற்பட்டுவரும் தவராசாவை தொடர்பு கொண்டு கேட்டபோதுஇ தாம் ஏற்கனவே 2002 ஆம் ஆண்டில் இதேபோன்ற முயற்சியை மேற்கொண்டிருந்ததாகவும் ஆனால் நுளம்புத்திரிகள் வெளியிடங்களிலிருந்து கொண்டு வரப்பட்டு குடாநாட்டில் விற்பனை செய்யப்பட்டதால் அவற்றுடன் போட்டிபோட முடியாத நிலையில் அந்த முயற்சி கைவிடப்பட்டதாகத் தெரிவித்த தவராசாஇ தற்பொழுது யாழ்ப்பாணத்தில் நுளம்புத்திரிகளுக்கு பெரும் கிராக்கியுள்ளதால் தாம் மீண்டும் இம்முயற்சியை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
வேப்பம் இலைஇ வேப்பம் பட்டைஇ வேப்பம் வித்துஇ துளசிஇ இலுப்பம் விதைஇ சாம்பல்இ ஓமம்இ சாம்பிராணி மற்றும் சிறிதளவு இரசாயன பொருட்கள் போன்றவற்றை மூலப்பொருட்களாகக் கொண்டு தயாரிக்கப்படும் இந் நுளம்புத்திரி தற்பொழுது குடாநாட்டில் மெதுமெதுவாக பிரபல்யமடைந்து வருகின்றது. நகரப் பகுதியில் விற்பனையாகி வருகின்ற இந் நுளம்புத்திரி பெட்டிக் கடைகளுக்கும் செல்லத் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உள்ளூர் உற்பத்தியை யாழ்ப்பாண லயன்ஸ் கழகம் தமது பராமரிப்பின் கீழுள்ள இடம்பெயர்ந்தோர் வதிவிடங்களில் உபயோகித்து வருவதாகக் கூறப்படுகின்றது. சிறு கைத்தொழிலாக நடைபெற்று வரும் உங்களது முயற்சி எந்தளவுக்கு பயனைத் தந்துள்ளதென அந்த உள்ளூர் உற்பத்தியாளர் தவராசாவை கேட்டபோது;
"இதுவரையில் 2 ஆயிரம் 3 ஆயிரம் ஹநுளம்புத்திரி' களை உற்பத்தி செய்துள்ளோம். அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. கடந்த டிசம்பரில் தான் இந்த முயற்சியை மீண்டும் ஆரம்பித்தோம். எமக்கும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இட வசதியில்லை. ஆட்களுக்கு பற்றாக்குறையுள்ளது. பணப் பிரச்சினையுள்ளது. எம்மால் மாத்திரம் இதைத் தொடர்ந்து பெரியளவில் செய்ய முடியுமென நான் கருதவில்லை. தனியொருவராக இல்லாமல் ஒரு கூட்டு முயற்சியாக மேற்கொண்டால் பாரியளவில் பலனை பெற முடியும். எமது பணம் வெளியே செல்லாமல் தடுக்க முடியும்" என்றார்.
ஏற்கனவே பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி ஒட்டு வேலைகளைச் செய்தல்இ நெருப்புக் குச்சிகளைத் தயாரித்தல் போன்ற உள்ளூர் உற்பத்தி முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவித்த தவராசாஇ தற்பொழுது குடாநாட்டில் நெருப்பெட்டி விற்கும் விலைக்கு அதை உற்பத்தி செய்யும் முயற்சியில் ஈடுபடலாமெனவும் அதற்குரிய தரப்பினரிடமிருந்து அனுமதி தேவை எனவும் தெரிவித்தார்.
பக்க விளைவுகள் குறித்த சோதனைகள் நடைபெற்றனவா?
நீங்கள் தயாரித்து வரும் நுளம்புத்திரியை பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படுமாவென்பதை அறிவதற்காக உரிய சோதனைகளை மேற்கொண்டீர்களா எனக் கேட்டதற்குஇ
"அவ்வாறு பிரத்தியேகமாக எந்தச் சோதனைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால்இ லயன்ஸ் கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போன்ற பலரும் இதை பயன்படுத்துகின்றனர். நாம் பயன்படுத்தும் மூலப்பொருட்களால் எவ்வித விளைவுகளும் வரமாட்டாதென அவர்கள் கூறுகின்றனர்" என்றார் தவராசா.
எதிர்காலத்தில் என்ன செய்வதாக உத்தேசம் என தவராசாவிடம் கேட்டபோது;
"அது குடாநாட்டு மக்களின் கைகளில் தான் தங்கியுள்ளது. உள்ளூர்ப் பொருட்களை வாங்குவதை மக்கள் கௌரவக் குறைவாக கருதுவதை இங்கு காண முடிகின்றது. உதாரணத்துக்குச் சொன்னால்இ யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட ஹமில்க்வைற்' சவர்க்காரம் குடாநாட்டு மக்களால் பெருமளவு நுகரப்படவில்லை. ஆனால்இ அநுராதபுரம்இ புத்தளம் போன்ற பகுதிகளில் ஹமில்க்வைற்' உற்பத்திகளுக்கு கிராக்கியிருந்தது. அதாவது என்ன விடயமென்றால் தமது ஊரிலிருந்து உற்பத்தியாகும் பொருட்களை நுகருவதற்கு மக்கள் முதலில் தயாராக வேண்டும். அந்த நிலை ஏற்பட்டாலேயே எந்தவொரு உள்ளூர் உற்பத்தியும் வெற்றியளிக்கும்.
தற்பொழுது கொழும்பிலிருந்து நுளம்புத்திரி வருவதில்லையென்பதால் எமது தயாரிப்பை வாங்குகின்றார்கள். மீண்டும் கொழும்பிலிருந்து நுளம்புத்திரி வருமானால் இதை திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். எனவேஇ எதிர்காலத்தில் எதைச் செய்வதானாலும் முதலில் மக்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் எமது சுய பொருளாதாரத்தையும் கட்டி யெழுப்பமுடியும்இ எவரிடமும் கையேந்த வேண்டி வராது.
தற்பொழுது மெழுகுதிரி வடிவிலேயே நாம் நுளம்புத்திரியை தயாரிக்கின்றோம்இ உடையாமலிருக்க வேண்டும் என்பதற்காக சற்று பருமன்மிக்கதாகவே தயாரிக்கின்றோம். சுருள் வடிவில் தயாரிப்பதாயின் அதற்கான ஹமில்லிங் இயந்திரம்' தேவை. அது யாழ்ப்பாணத்தில் இல்லைஇ இதை விட பொதி செய்வதிலும் பல சிக்கல்கள் உள்ளன.
எனவேஇ பல தடைகளையும் தாண்டி எமது தயாரிப்பை முன்னேற்ற வேண்டுமாயின் எமக்கு உதவிகள் கிடைத்தாக வேண்டும். அது சிந்தனை ரீதியாக கூட இருக்கலாம். மக்களின் ஆதரவே மிக முக்கியமானது என கூறிமுடித்தார் அவர்.
யாழ்ப்பாண மக்களை கையேந்தும் நிலைக்கு ஆட்சியாளர்கள் தள்ளிவிட்டுள்ள போதிலும் "எம்மால் முடியும்" என்பதை பறைசாற்றும் விதத்திலேயே இந்த நுளம்புத்திரி உற்பத்தி பார்க்கப்படுவதாக அவதானிகள் கூறுகின்றனர்.
முன்னர் சவர்காரத்தை ஆட்சியாளர்கள் தடைசெய்தபோது யாழ்ப்பாணம் பனம்பழத்தில் உடுப்புத் தோய்த்ததுஇ
மின்சாரம் மண்ணெண்ணையை தடை செய்த பொழுது யாழ்ப்பாணம் ஈருருளிகளைச் சுற்றி படம் பார்த்தது. தேங்காய் எண்ணெய் குப்பிவிளக்கை வடிவமைத்து படித்ததுஇ பெற்றோலை தடை செய்த பொழுது யாழ்ப்பாணம் மண்ணெண்ணெயில் பெற்றோலை குழாய் வழியே துளித்துளியாக ஊற்றி அதை ஊதி ஊதி உந்துருளியை ஓட்டியது. இவ்வாறு தொடரும் சாதனைப் பட்டியலில் இன்றைய நுளம்புத்திரியும் இணைந்துள்ளது எனலாம்.(இந்திய அமைதிப்படை வந்த காலத்தில் கூட நுளம்புத்திரி உற்பத்தி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது).
எது எவ்வாறிருந்தாலும் கொழும்பில் தொங்கி வாழ்வதால் ஏற்படக்கூடிய விளைவுகளை இன்று நாம் கண்முன்னே காண்கின்றோம். இந்த நிலையை நிரந்தரமாக நீக்க வேண்டுமானால் தவராசாவின் ஆதங்கமான உள்ளூர் உற்பத்திகளை மக்கள் நாட வேண்டியதே ஒரே வழி.
இந்த உள்ளூர் உற்பத்தி முயற்சிக்கு உதவ விரும்புவோர் தவராசாவின் 077- 9061568 என்ற கையடக்க தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளலாம்.
முகவரி: இல: 6, கனகசபை வீதி, சிவலிங்கப் புளியடி, வண்ணார் பண்ணை, யாழ்ப்பாணம்.
Tuesday, January 16, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
பொதுவாக இரவில்தான் மக்கள் நுளம்புத்திரியை பாவிப்பார்கள். இது சிக்கின் குனியா, டெங்கு போன்றவற்றை தடுப்பதில் பெரிதும் உதவாது. ஏனெனில் இவை பகலில் கடிக்கும் நுளம்பிளால் பரவுபவை.
Post a Comment